Saturday, 17 August 2013

innambur , innambur siva, iravatham, suyambu moorthy,ஐராவதம், சூரியன் , அகஸ்தியர், சுதஸ்மன் , siva

ஸ்தல வரலாறு:
 ஐராவதம், சூரியன் , அகஸ்தியர், சுதஸ்மன் ஆகியர் வழிபட்ட தலம்

 1. சிவபெருமானை  பூஜை செய்து செல்லும் வழியில் தேவ லோக  அதிபதியான  இந்திரனை  துர்வசமுனிவர்  சந்திக்கின்றார்  .
 தான் பூஜை செய்த விவரம் கூறி  சிவ பிரசாதம் வழங்கி ஆசி வழங்குகின்றார்.
  இந்திரன் பக்தி யோடு  வாங்கி  ஐராவதம் மீது வைக்கும் பொழுது ஐராவதம் அந்த பிரசாதத்தை காலில் இட்டு  மிதிகின்றது  .
  இந்த நிகழ்ச்சியை  கண்ட துர்வாசமுனிவர்   ஐராவதம்  காட்டு யானையாக மாறும் படி சாபம் இடுகின்றார் .
  தவறை உணர்ந்த ஐராவதம் துர்வாசமுனிவரிடம் சாப விமோசனம்  வேண்டி கேட்கிறது  அதற்கு செண்பக மரங்கள் நிறைந்த வனத்தில் இருக்கும் சிவ பெருமானை வழிபட்டால் உன் சாபம் நிவர்த்தியாகும் என  துர்வாசமுனிவர்  சாப விமோச்சனதிற்கான வழி  கூறுகின்றார் .
 செண்பக வனத்தை தேடி அலைந்த ஐராவதம் இறுதியாக  செண்பக வனத்தை இங்கு காண்கிறது . சிவ லிங்கத்தை தேடி அலைகிறது ,
 சிவ லிங்கம் இல்லாததால்  தரையை  தோண்டி தேடிகின்றது  ஐராவதத்தின் பக்தியை கண்டு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக பூமியில் இருந்து வெளி வந்து காட்சி வழங்குகின்றார் .
 சிவபெருமானை கண்டு சாப விமோசனம்  பெற்ற ஐராவதம் சிவ பூஜை செய்து தேவலோகத்திற்கு  சென்றது.
இதன் காரணமாக இங்கு மூலஸ்தான விமானம் கஜபிரஸ்ட விமானம் உள்ளது

 2. இன்னம்பர் பெயர் காரணமும்  வரலாறும் இனன் நம்பும் ஊர் இனன் (சூரியன்) தன்னுடைய ஆற்றலை பெறவேண்டி நம்பிய  ஊர்

  முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக  சூரியன் தன்னுடைய ( தேஜீஸ் ) பொலிவிழந்து  ஒளிகுறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும்  என்று யோகிகளிடம்  கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட  இன்னம்பரில் உள்ள  (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் என  கூறுகின்றனர் .
 இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி , கொடிமரத்து விநாயகர் , பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே  தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாபவிமோசனம்  கிடைக்க உதவுமாறு வேண்டுகோள்  விடுகின்றார்.     சூரியனின் வேண்டுகோளுக்கு  செவிசாய்த்த  நந்தி, கொடிமரத்து விநாயகர் , பலிபீடம் ஆகியோர்  சூரியன் வழிபட  சற்று விலகி வழிகொடுத்தனர். நந்தி விலகிய தளங்களில் இந்த தளமும் ஒன்று .


3.சுயம்பு மூர்த்தி யான சுவாமி அகஸ்தியருக்கு முறை படி தமிழ் இலக்கணம் உபதேசம் செய்த தலம் .
 அதன் காரணமாக சுவாமி அட்சரபுரீஸ்வரர் என சமஸ்கிரத மொழியிலும்  எழுத்தறிநாதர் என தமிழிலும்  அழைக்கப்படுகின்றார் .

இதன்  தாத்பரிகம்மாக  அட்சராபியசம் எனும் எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி இங்கு நடை பெருகிறது.
 சிறிய குழந்தைகளை  பெற்றோர் மடியில் அமர செய்து குழந்தை கை விரலை பிடித்து நெல்லில் சிவனுக்கு உடைய மந்திரத்தை எழுதுவதன் மூலம்  அட்சராபியசம் நடை பெறுகிறது .

4.
 சோழ ராஜாக்கள் ஆட்சி  செய்த காலத்தில் இந்த சிவ தலத்தில்  சுதஸ்மன் என்னும் சிவாச்சாரியார் பூஜை செய்து வந்தார் அத்துடன்  கணக்கு பிள்ளை (accountant ) வேலையும் சேர்த்து செய்து வந்தார் .
 வேலை பளு காரணமாக கணக்கு எழுதாமல் சுவாமியிடம் வரவு செலவுகளை சொல்லி வந்தார் .
 கோவிலுக்கு கொடுக்கபட்ட  பொருட்கள் மற்றும் செல்வங்களை முறையாக சுவாமிக்கு செலவளித்தார் .
 தான் கோவில்லுகாக பெற்ற செல்வங்களின் கணக்குகளை அரசன் முன்பு சமர்பிக்க வேண்டி உத்தரவு வர தடுமாறிய  சுதஸ்மன்  சுவாமியிடம் முறையிட்டார் .
 அசரிரியாக வந்த சுவாமி சன்னதியில் ஒரு கட்டு ஓலை சுவடியை வைத்து செல்லும்படி கூறினார் .
 சுதஸ்மன்  அசரிரி கூறிய படி சுவாமி சன்னதியில்  ஓலை சுவடியை வைத்து சென்றார் .
 அடுத்தநாள் காலையில் சுவடிகளில் எழுதி இருந்த கணக்குகளை படித்து பார்த்தார் புரியாததால் அப்படியே எடுத்து சென்று அரசன் இடம் ஒப்படைத்தார் .
 படித்து பார்த்த அரசன் கணக்கில் சந்தேகம் வர அடுத்த நாள் நீதிமன்றத்தில்  வந்து தன் சந்தேகத்தை தீர்க்கும் படி உத்தரவிட்டார் ..

தன் வழக்கிற்காக  சுதஸ்மன் நீதிமன்ற வாயிலில்  காத்துகொண்டு இருந்தார். மாலை பொழுது  வந்தது அதுவரை அமைதியாக இருந்த  சுதஸ்மன் நீதிமன்ற வாயில் காப்பாளரிடம் தன் வழக்கு எப்பொழுது விசாரணைக்கு வரும் என கேட்டார்.
நீதி மன்ற காப்பாளர் உங்கள் வழக்கு தான் காலை முடிந்துவிட்டதே  ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள் என கேட்க தான் இன்னும் விசாரணைக்கு செல்லவில்லை என சுதஸ்மன்  கூற இருவருக்கும்  இடையில் தர்க்கம்  உண்டாகிறது .
இதை அறிந்த அரசர் அங்கு வருகிறார் இந்நிலையில் சுதஸ்மன் தான் விசாரணைக்கு வரவில்லை என முழு விபரமும் கூறுகிறார் .
 விசாரணையில் தமது சந்தேகங்களை நீங்கள்  நீக்கிவிட்டீர்கள் என அரசர்  கூறுகிறார் .
 இந்நிலையில் சுவாமி இட்சா சக்தி , ஞான சக்தி , கிரியா சக்தி சொரூபமாக  காட்சியளித்தார் .
 இந்த காட்சி மூலஸ்தான விமானத்தின் முன்புறம் சுதை வடிவில் உள்ளது .

No comments:

Post a Comment